டோக்கியோ குவாட் உச்சி மாநாடு: உலக தலைவர்களை தனித்தனியே சந்திக்கும் புதிய அவுஸ்திரேலிய பிரதமர்
ஜப்பானில் நடைப்பெறும் குவாட் உச்சி மாநாட்டின் போது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்திய பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேச இருப்பதாக அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க நடைப்பெற்று வந்த தேர்தல் வாக்குப்பதிவில் லிபரல் கட்சி தலைவர் ஸ்காட் மோரிசனை பின்னுக்கு தள்ளி அவுஸ்திரேலியாவின் தொழில் கட்சி தலைவர் அந்தோனி அல்பானீஸ் புதிய பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.
இந்தநிலையில் அவுஸ்திரேலிய தேர்தலில், தொழில் கட்சியின் வெற்றி உறுதியானதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அந்தோனி அல்பானீஸ், பருவநிலை மாற்றம் மற்றும் அதுத் தொடர்பான பிரச்சனைகளில் உலகத்துடன் நமது ஈடுபாடு குறித்த கொள்கைகளில் சில புதிய மாற்றங்களை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
மேலும் தானும் தனது உறுப்பினர்களும் வரும் திங்கள்கிழமை பதவியேற்க இருப்பதாக அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து சீனாவின் வளர்ந்து வரும் ராணுவ மற்றும் பொருளாதார செல்வாக்கு குறித்து விவாதிப்பதற்கான குவாட் உச்சிமாநாட்டிலும் அவுஸ்திரேலிய புதிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கலந்து கொள்ள இருப்பதாகவும், இது அவுஸ்திரேலியாவின் ஆட்சி மாற்றத்தை உலக நாடுகளுக்கு எடுத்து செல்லும் எனவும் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: கனடாவில் நள்ளிரவு 12.30 மணிக்கு படுகாயத்துடன் கிடந்த பெண் யார்? உயிரிழந்துவிட்டதாக தகவல்
அத்துடன் ஜப்பானின் டோக்கியோ நகரில் செவ்வாய் கிழமை நடைப்பெறும் இந்த மாநாட்டில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்திய பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேச இருப்பதாக அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.