அவுஸ்திரேலியாவில் 12 வயது பிள்ளைகளுக்கு தடுப்பூசி போட ஒப்புதல்!
அவுஸ்திரேலியாவில் 12 முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட பிள்ளைகளுக்கு Pfizer-BioNTech COVID-19 தடுப்பூசி போட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதுவரை, அவுஸ்திரேலியாவில் 16 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினருக்கு மட்டுமே Pfizer-BioNTech தடுப்பூசி போட ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது.
அவுஸ்திரேலியாவின் 3 மாநிலங்கள், டெல்ட்டா வகைக் கிருமியின் பரவலைக் கட்டுப்படுத்த முயன்று வரும் வேளையில், சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட் (Greg Hunt) இது குறித்து அறிவிப்பை வெளியிட்டார்.
உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் நடத்தப்பட்ட ஆய்வுகளைத் தீர ஆராய்ந்த பிறகு, அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா ஆகியவற்றிலும் சில வாரங்களுக்கு முன்பு இது போன்று, பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.