அவுஸ்திரேலியா நாட்டில் டிக்டாக் செயலிக்கு தடை விதிப்பு!
அவுஸ்திரேலியா நாட்டில் இனி டிக்டாக் செயலி பயன்பாட்டில் இருக்காது என அறிவித்த அந்நாட்டு அரசு டிக்டாக்கிற்கு தடை விதித்துள்ளது.
டிக்டாக்கை தடை செய்யும் நாடுகள்
சீனாவால் அறிமுகப்படுத்தப்பட்ட டிக்டாக் செயலி உலகம் முழுவதும் பயங்கரமாக பிரபலமானது. மக்கள் அனைவரும் தங்களது ஸ்மார்ட் போன்களில் டிக்டாக் செயலியை பதிவிறக்கம் செய்து வைத்து பயன்படுத்த துவங்கினர்.
டிக்டாக் செயலி பாதுகாப்பானது அல்ல என சில உலக நாடுகள் ஆராய்ச்சியில் தீர்மானித்தது. அதனை தொடர்ந்து அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
@Representational photo
இதன் தொடர்ச்சியாக பிரித்தானிய அரசு அலுவலக செல்போன்களில் டிக்-டாக் செயலியை பயன்படுத்த தடை விதித்துள்ளது. பாதுகாப்பு கருதி அந்நாட்டு அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறியுள்ளது.
அரசின் முக்கிய அலுவலகங்களின் பாதுகாப்பு அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அரசு அலுவலகங்களில் அரசுக்கு சொந்தமான மின்னணு சாதனங்களில் சீனாவின் டிக் டாக் செயலியை பயன்படுத்த தடை விதிப்பதாக பிரித்தானிய பாராளுமன்றம் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் தடை
மற்ற மேற்கத்திய நாடுகளில் தடைகளைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியா அரசாங்கம் பாதுகாப்புக் காரணங்களுக்காக அரசாங்கத்திற்கு சொந்தமான அனைத்து சாதனங்களிலும் TikTok ஐ தடை செய்துள்ளது.
@Adobe Stock
அட்டர்னி ஜெனரல் மார்க் ட்ரேஃபஸ், இந்த உத்தரவு விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும், ஒவ்வொரு வழக்கின் அடிப்படையில் மட்டுமே விதிவிலக்குகள் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
அனைத்து மத்திய அரசு நிறுவனங்களில் பாதிக்கும் மேற்பட்டவை தற்போது டிக்டாக்கை அரசாங்க சாதனங்களிலிருந்து தடை செய்கின்றன.
இதுகுறித்து பிரதமர் அந்தோணி அல்பானிஸ்(anthony albanese) கூறுகையில், டிக் டாக் செயலியால் ஏற்படும் சாதக, பாதங்கள் குறித்து உள்துறை அமைச்சகம் அளித்துள்ள அறிக்கையின் அடிப்படையில் தடை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.