16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு தடை: அவுஸ்திரேலிய அரசு அதிரடி!
அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் மசோதாவை அந்நாட்டு அரசாங்கம் ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது.
சமூக வலைதளங்களுக்கு தடை
சமூக ஊடகங்கள் நம் வாழ்வில் பெரும் பகுதியாகிவிட்டாலும், குறிப்பாக சிறுவர்களின் மீது அதன் தாக்கம் கவலைக்குரியதாக உள்ளது.
இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வின்படி, சமூக ஊடகங்களின் அதிகப்படியான பயன்பாடு சிறுவர்களின் மனநிலை, படிப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை பாதிப்பதாக தெரிவித்துள்ளது.
எனவே இதனை கருத்தில் கொண்டு, ஆஸ்திரேலிய அரசாங்கம் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை தடை செய்யும் புதிய சட்டத்தை அவுஸ்திரேலிய அரசு நிறைவேற்றியுள்ளது.
இந்த சட்டத்தின்படி, சமூக ஊடக நிறுவனங்கள் குழந்தைகளின் கணக்குகளை நீக்க வேண்டும் மற்றும் இதற்கு இணங்காவிட்டால் கடுமையான அபராதம் விதிக்கப்படும்.
இருப்பினும், இந்த சட்டத்திற்கு எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன, சிலர் இது குழந்தைகளின் தகவல் பெறும் உரிமையை கட்டுப்படுத்தும் என்று வாதிடுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |