95 ஓட்டங்களுக்கு சுருண்டு வங்காளதேசம் தோல்வி: தரமான பதிலடி கொடுத்த அவுஸ்திரேலிய அணி
Australia beat bangladesh innings and 51 runs: வங்காளதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் அவுஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மக்கேயில் நடந்த டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது.
கடைசி டெஸ்ட் போட்டி
அவுஸ்திரேலியா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மக்கேயில் நடந்தது.
வங்காளதேசம் அணி முதல் இன்னிங்ஸில் 64 ஓட்டங்களுக்கு சுருண்டது. பின்னர் அவுஸ்திரேலிய அணி 210 ஓட்டங்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல்அவுட் ஆனது.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வங்காளதேச அணி ஸ்டார்க், கம்மின்ஸ் மற்றும் லயன் ஆகியோரின் மிரட்டலான பந்துவீச்சில் 95 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
இதன்மூலம் அவுஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது.


| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |