நொறுங்கிய சாம் கர்ரனின் கடைசி ஓவர்: பரபரப்பான ஆட்டத்தில் அவுஸ்திரேலியா அபார வெற்றி
Australia beat england in 1st t20: இங்கிலாந்திற்கு எதிரான முதல் டி20 போட்டியில் அவுஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.
மெல்போர்னில் நடந்த முதல் டி20 போட்டியில், அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
ஹாரி ப்ரூக் அதிரடி
அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மெல்போர்னில் நடந்தது.
முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ஓட்டங்கள் எடுத்தது. ஹாரி ப்ரூக் (Harry Brook) 28 பந்துகளில் 65 ஓட்டங்கள் விளாசினார்.
டாம் பான்டன் 39 ஓட்டங்களும், ஜோர்டன் காக்ஸ் 27 ஓட்டங்களும், சாம் கர்ரன் 21 ஓட்டங்களும் எடுத்தனர். ஜேக் எட்வர்ட்ஸ் மற்றும் நிகில் சௌத்ரி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய அவுஸ்திரேலிய அணி அதிரடியாக தொடங்கியது. அணித்தலைவர் மிட்செல் மார்ஷ் 37 ஓட்டங்களும், சாம் ஹார்பர் 32 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

நிகில் சௌத்ரி அதிரடி ஆட்டத்தில் மிரட்ட, டிம் டேவிட் 13 பந்துகளில் 20 ஓட்டங்கள் விளாசி அடில் ரஷீத் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அவுஸ்திரேலியா வெற்றி
அவுஸ்திரேலிய அணி வெற்றியை நெருங்கியபோது, நிகில் சௌத்ரி (Nikhil Chaudhary) 38 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 66 ஓட்டங்கள் விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார்.
கடைசி ஓவரில் அணியின் வெற்றிக்கு 11 ஓட்டங்கள் தேவைப்பட, சாம் கர்ரன் வீசிய அந்த ஓவரில் முதல் பந்தையே ஜேக் எட்வார்ட்ஸ் சிக்ஸருக்கு பறக்கவிட்டார்.
அடுத்த பந்தில் 2 ஓட்டங்கள் கிடைக்க, 3வது பந்து டாட் ஆனது. ஜேக் எட்வர்ட்ஸ் 4வது பந்தில் 2 ஓட்டங்கள் எடுக்க ஸ்கோர் சமன் ஆனது.
அதற்கு அடுத்த பந்தில் ஜேக் எட்வர்ட்ஸ் பவுண்டரி அடிக்க, அவுஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
