2வது ஆஷஸ் டெஸ்ட்: சொற்ப ரன்களுக்கு இங்கிலாந்தை சுருட்டி அவுஸ்திரேலியா அபார வெற்றி
அடிலெய்டில் நடைபெற்ற 2வது ஆஷஸ் டெஸ்டில் இங்கிலாந்தை 275 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அவுஸ்திரேலியா அபார வெற்றிப்பெற்றது.
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் ஆஷஸ் டெஸ்டில் இங்கிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணி வீழ்த்திய நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் அடிலெய்டில் இரவு-பகல் போட்டியாக டிசம்பர் 16ம் திகதி தொடங்கியது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 473 ரன்கள் எடுத்திருந்து போது டிக்ளர் செய்தது.
இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 236 ரன்களுக்கு சுருண்டது.
தொடர்ந்து 2வது இன்னிங்ஸில் விளையாடிய அவுஸ்திரலிய அணி நான்காவது நாள் 9 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்திருந்து போது டிக்ளர் செய்து, இங்கிலாந்து வெற்றிக்கு 468 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.
468 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 4வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்திருந்தது.
5வது மற்றும் கடைசி நாளான இன்று இங்கிலாந்து வெற்றிக்கு 386 ரன்களும், அவுஸ்திரேலிய வெற்றிக்கு 6 விக்கெட்டுகளும் தேவை என்ற நிலையில் போட்டி தொடங்கியது.
இங்கிலாந்து அணி எப்படியாவது கடைசி வரை தாக்குப்பிடித்து டிரா செய்யும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்த இங்கிலாந்து அணி 192 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி 275 ரன்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவின் படுதோல்வியடைந்தது.
Jhye Richardson special ?#Ashes #Ashes2021pic.twitter.com/HkjHZXIyHQ
— CRICKET VIDEOS ? (@AbdullahNeaz) December 20, 2021
2வது இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய வீரர் ரிச்சர்ட்சன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
Richardson has FIVE and Australia make it 2-0!!! ????
— Fox Cricket (@FoxCricket) December 20, 2021
? Watch Day 5 #Ashes on @foxtel CH 501 or stream on @kayosports: https://t.co/FjGXUvXMTf
? Blog: https://t.co/wlw2EZ842A
? Match Centre: https://t.co/q4Er4ntgCq pic.twitter.com/SqrLDaUdVA
இந்த வெ்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 2-0 என அவுஸ்திரேலிய முன்னிலைப் பெற்றுள்ளது.