கேப்டனாக முதல் போட்டியிலேயே தோல்வி! சுப்மன் கில் மோசமான சாதனை
இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அவுஸ்திரேலியா வெற்றி
அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி பெர்த்தில் நடந்தது.
மழை காரணமாக 26 ஓவர்கள் போட்டியாக குறைக்கப்பட்டது.
முதலில் ஆடிய இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 136 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் ஆடிய அவுஸ்திரேலியா 21.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 131 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அணித்தலைவர் மிட்செல் மார்ஷ் (Mitchell Marsh) 46 ஓட்டங்களும், ஜோஷ் பிலிப் 37 ஓட்டங்களும் விளாசினர்.
மோசமான சாதனை
சுப்மன் கில் (Shubman Gill) கேப்டனாக தனது முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளார்.
இதன்மூலம் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும், கேப்டனாக விளையாடிய முதல் போட்டியிலேயே தோல்வியை சந்தித்த இரண்டாவது இந்தியர் என்ற மோசமான சாதனைக்கு கில் சொந்தக்காரர் ஆனார்.
இதற்கு முன்பு விராட் கோஹ்லி 2014யில் டெஸ்ட் போட்டியிலும், 2013யில் ஒருநாள் போட்டியிலும், 2017யில் டி20 போட்டியிலும் கேப்டனாக தோல்விகளை சந்தித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |