ஃபிபா உலகக்கிண்ணம்: பிரேசிலுக்கு அதிர்ச்சி கொடுத்த மொரோக்கோ..ஸ்கொட்லாந்து, அவுஸ்திரேலியா வெற்றி
2026 ஃபிபா கால்பந்து உலகக்கிண்ணத்தில் அவுஸ்திரேலியா, ஸ்கொட்லாந்து அணிகள் வெற்றி பெற, பிரேசில் மற்றும் மொரோக்கோ அணிகள் மோதிய போட்டி டிராவில் முடிந்தது.
சைபரி கோல்
நியூஜெர்ஸியில் நடந்த போட்டியில் பிரேசில் - மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் மொராக்கோ வீரர் இஸ்மாயில் சைபரி (Ismael Saibari) கோல் அடித்தார்.

அதனைத் தொடர்ந்து பிரேசிலின் இளம் வீரர் வினீசியஸ் ஜூனியர் 32வது நிமிடத்தில் கோல் அடித்து பதிலடி கொடுத்தார்.
அதன் பின்னர் மொராக்கோ அணி வீரர்கள் கடுமையாக நெருக்கடி கொடுக்க பிரேசிலால் கோல் அடிக்க முடியவில்லை.
டிரா
இறுதியில் ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது. வான்கூரில் நடந்த போட்டியில் அவுஸ்திரேலிய அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் துருக்கியேவை வீழ்த்தியது. நெஸ்டோரி, கானர் தலா ஒரு கோல் அடித்தனர்.
போஸ்டன் மைதானத்தில் நடந்த மற்றொரு போட்டியில் ஸ்கொட்லாந்து அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் ஹைதி அணியை வீழ்த்தியது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |