பாகிஸ்தானை 3வது டி20-யில் பந்தாடிய அவுஸ்திரேலிய அணி: ஸ்டோனிஸ் அதிரடியில் அபார வெற்றி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் அவுஸ்திரேலியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இலக்கை நிர்ணயித்த பாகிஸ்தான்
அவுஸ்திரேலியா-பாகிஸ்தான் இடையிலான 3வது டி20 போட்டி ஹோபார்ட்(Hobart) மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க வீரராக களமிறங்கிய பாபர் அசாம் அதிகபட்சமாக 41 ஓட்டங்கள் குவித்து விக்கெட்டை ஜம்பா பந்துவீச்சில் பறிகொடுத்தார்.
அவரை தொடர்ந்து வந்த வீரர்கள் யாரும் நிலைத்து விளையாடாததால் பாகிஸ்தான் அணி 18.1 ஓவர்கள் முடிவிலேயே 10 விக்கெட் இழப்புக்கு 117 ஓட்டங்கள் குவித்தது.
அபார வெற்றி
எளிய இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய 11.2 ஓவர்கள் முடிவிலேயே 3 விக்கெட் இழப்புக்கு 118 ஓட்டங்கள் குவித்து அசத்தியது.
அத்துடன் பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அவுஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோனிஸ் 61 ஓட்டங்கள் குவித்து மிரட்டினார். மேலும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 0-3 என்ற கணக்கில் அவுஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |