சர்வதேச எல்லையை எப்ப சார் திறப்பீங்க? அவுஸ்திரேலிய மந்திரி பளார் பதில்!
2022-ஆம் ஆண்டின் நடுப்பகுதி அல்லது இரண்டாம் பாதி வரை அவுஸ்திரேலியாவின் சர்வதேச எல்லைகள் முழுமையாக மீண்டும் திறக்கப்படாமல் போகலாம் என்று வர்த்தக அமைச்சர் டான் தெஹான் தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா வைரஸ் பரவியது. இதையடுத்து அங்கு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் அவுஸ்திரேலியாவில் சர்வதேச எல்லைகளும் மூடப்பட்டன.
இதையடுத்து அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி விடக்கூடாது என்பதில் அவுஸ்திரேலிய அரசு மிகுந்த கவனமாக உள்ளது. இதனால் தனது நாட்டின் சர்வதேச எல்லையை முழுமையாக திறக்காமல் உள்ளது.
இந்தநிலையில், அவுஸ்திரேலியாவின் வர்த்தக மந்திரி டேன் தெஹான் (Dan Tehan) ஸ்கை நியூஸ் பத்திரிக்கைக்கு அளித்த நேர்காணலின் போது அவரிடம் விமான நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா துறைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் சர்வதேச எல்லைகள் திறக்கப்படும் என்று எப்போது கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த டேன் தெஹான், "ஆஸ்திரேலியாவில் சர்வதேச எல்லைகள் அடுத்த ஆண்டின் பாதிவரை முழுமையாக திறக்கப்படாமல் போகலாம்.
ஆஸ்திரேலியாவுக்கும், நியூசிலாந்துக்கும் இடையேயான பயணம் மீண்டும் திறக்கப்படலாம் என்று நான் நம்புகிறேன்" என்று கூறினார்.
அவுஸ்திரேலியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 21 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.