Coffee போட தெரிந்தால் ரூ.2 கோடி சம்பளமாம்
அவுஸ்திரேலியாவில் காபி தயாரிப்பாளர்களுக்கு மாதம் ரூ.2 கோடி சம்பளம் தர தயாராக இருப்பதாக 'The Good Cartel' என்ற ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்து இருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கொரோனா காலத்தில் அவுஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்ட கட்டுப்பாடுகள் அந்த நாட்டின் சுற்றுலா மற்றும் வணிகத்துறை ஆகியவற்றை அதிகமாக பாதித்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சுற்றுலா மற்றும் வணிகத்துறைகள் மீண்டும் சுறுசுறுப்பு அடைய தொடங்கி வருகின்றன.
இதனிடையே வணிக வளாகங்கள் மற்றும் ஹோட்டல்களில் ஏற்பட்டுள்ள ஊழியர்கள் தட்டுப்பாட்டால், அதிகப்படியான சம்பளம் மற்றும் ஊக்கத்தொகை போன்ற பல்வேறு சலுகைகளை அறிவித்து இளம் மற்றும் திறமை வாய்ந்த ஊழியர்களை வணிக மற்றும் ஹோட்டல் நிறுவனங்கள் வேலைக்கு அமர்த்தி வருகின்றனர்.
அந்தவகையில், தற்போது அவுஸ்திரேலியாவின் ப்ரூமே( Broome) பகுதியில் உள்ள 'The Good Cartel' என்ற காபிக்கடை ஒன்று அவர்கள் நிறுவனத்தில் பணிபுரிய ஊழியர்களுக்கு ஆண்டுக்கு அவுஸ்திரேலிய ரூபாய் மதிப்பில் சுமார் 92,030 டாலரும், இலங்கை ரூபாயின் மதிப்பில் சுமார் 2 கோடி ரூபாய் வழங்க முன்வந்துள்ளது.
இதுகுறித்து அந்த ஹோட்டலின் உரிமையாளர் ஜாக் கெய்ன் தெரிவித்துள்ள கருத்தில், பொதுவாக இது மாதிரியான அறிவிப்புகள் வர்த்தக தந்திரங்களாக பார்க்கப்படும், ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பால் இந்த வர்த்தக தந்திரமானது அத்தியாவசிய தேவையின் அடிப்படையிலான அறிவிப்பாக அமைந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.
இந்த வேலைவாய்ப்பு குறித்த செய்தி குறிப்பிட்ட வேலைவாய்ப்பு தளம் மற்றும் முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது, அதில் கூறப்பட்டுள்ள வேலைக்கான அடிப்படை திறன் மற்றும் குணாதிசய தேவைகளில், நல்ல அணுகுமுறை மற்றும் குழுப்பணி முக்கியமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வேலை பற்றிய அதிக திறன் இல்லாவிட்டாலும், நல்ல அணுகுமுறை கொண்டவராக இருப்பின் அவருக்கு தக்க பயிற்சி வழங்கப்பட்டு வேளைக்கு அமர்த்தப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தது 6 மாத காலமாவது பணிபுரிந்தால் நிறுவனத்துக்கு சாதகமாக பார்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.