தேசிய கீதத்தில் ஒற்றை வார்த்தையை மாற்றிய அவுஸ்திரேலியா! கிடைத்துள்ள கலவையான வரவேற்பு
பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியதன்படி நாட்டின் பழங்குடி மக்களையும் பிரதிபலிக்கும் வகையில் ஆஸ்திரேலியா தனது தேசிய கீதத்தில் ஒரு வார்த்தையை மாற்றியுள்ளது.
புத்தாண்டு தினத்தன்று அவுஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்காட் மோரிசன், "Advance Australia Fair" தேசிய கீதத்தின் இரண்டாவது வரியான "For we are young and free" என்பதை "For we are one and free" என்று மாற்றப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
இந்த மாற்றம் ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வந்தது.
அவுஸ்திரேலியாவை "பூமியில் மிகவும் வெற்றிகரமான பன்முக கலாச்சார நாடு" என்று கூறிய பிரதமர் ஸ்காட் மோரிசன் "இந்த மாபெரும் ஒற்றுமை நமது தேசிய கீதத்தில் முழுமையாக பிரதிபலிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டிய நேரம் இது" என்று கூறினார்.
இந்த வார்த்தை மாற்றத்துக்கு அந்நாட்டில் கலவையான வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த மாற்றம் பழங்குடியினர் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவின் கலாச்சாரங்கள் 65,000 ஆண்டுகள் பழமையானவை என்பதை ஒப்புக்கொள்ளும் வகையில் அமைந்துள்ளதாக சுதேச ஆஸ்திரேலியர்களுக்கான அமைச்சர் கென் வியாட் கூறியுள்ளார்.
மேலும், இந்த மாற்றம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டதாகவும், அதற்கு தனது ஆதரவை வழங்கியதாகவும் அவர் கூறினார்.
மறுபுறம், நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக சட்டப் பேராசிரியர் மேகன் டேவிஸ், இந்த மாற்றம் குறித்து பழங்குடி மக்களுடன் கலந்தாலோசிக்காததை விமர்சித்துள்ளார்.
அவர் தனது சமுக வலைதள பக்கத்தில் "இது 2020-ஐ முடித்து 2021-ஐ தொடங்குவதற்கான ஏமாற்றமளிக்கும் வழியாகும். எல்லாம் எங்களை பற்றி இருக்கிறது, ஆனால் அதில் நாங்கள் இருப்பதில்லை" என விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
பீட்டர் டோட்ஸ் மெக்கார்மிக் இயற்றிய 'Advance Australia Fair' முதன்முதலில் 1878-ல் நிகழ்த்தப்பட்டது. இது 1984-ஆம் ஆண்டில் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திரு செல்லமாணிக்கம் முருகநாதபிள்ளை
காரைநகர், பருத்தியடைப்பு, ஊர்காவற்துறை, L'Île-Saint-Denis, France
23 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி நாகராசா தனலெட்சுமி
Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada, Brampton, Canada, யாழ்ப்பாணம்
20 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கருணாகரன் தயாளசாமி
வேலணை, கொட்டடி, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France, Markham, Canada
26 May, 2021
நன்றி நவிலல்
திரு சுப்பிரமணியம் சிவஞானம்
தாவடி வடக்கு, இணுவில், கந்தானை, சிங்கப்பூர், Singapore, Combs-la-Ville, France
27 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு கிருஸ்ணமூர்த்தி கதிர்காமு
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Ratingen, Germany, Toronto, Canada, Zürich, Switzerland
23 May, 2022
மரண அறிவித்தல்
திரு நாராயனர் இராசரத்தினம்
ஏழாலை, யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு, Sokoto, Nigeria, London, United Kingdom
22 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி ருக்குமணி வரதராசா
சுழிபுரம் மேற்கு, லியோன், France, Bobigny, France, London, United Kingdom, அமெரிக்கா, United States
20 May, 2022