உலகக்கோப்பை இறுதிப்போட்டி! அதை பற்றி கவலைப்படாம பயமின்றி ஆடுவோம்... தில்லாக பேசிய அவுஸ்திரேலிய பயிற்சியாளர்
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை அவுஸ்திரேலியா எதிர்கொள்ளவுள்ள நிலையில் அது குறித்து அணியின் பயிற்சியாளர் லாங்கர் பேசியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் இறுதி போட்டியில் அவுஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன.
இதுகுறித்து பேசிய அவுஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், இறுதிப்போட்டியில் டாஸ் பற்றி கவலைப்படாமல் அச்சமின்றி விளையாடுவோம்.
முதலில் பேட்டிங் செய்தாலும் அல்லது முதலில் பந்துவீசினாலும், எந்த சூழ்நிலையிலிருந்தும் வெல்ல முடியும் என்ற மனநிலை எங்களுக்கு உள்ளது.
நியூசிலாந்து உண்மையிலேயே நல்ல அணி. அவர்கள் தங்களது வேலையை சிறப்பாக செய்து முடிக்கிறார்கள்.
அந்த அணியை சாதாரணமாக நினைக்கவே மாட்டோம் என கூறியுள்ளார்.