தென்கொரிய பெண்களை துஷ்பிரயோகம் செய்த இந்திய வம்சாவளி! 40 ஆண்டுகள் சிறை..அவுஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பு
அவுஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு, தென்கொரிய பெண்களை துஷ்பிரயோகம் செய்த வழக்கில் 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
முன்னாள் IT ஆலோசகர்
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வசித்து வந்தவர் பாலேஷ் தன்கர் (43). இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் முன்னாள் IT ஆலோசகர் ஆவார்.
பாலேஷ் போலியான வேலைவாய்ப்பு விளம்பரங்களை வெளியிட்டுள்ளார். அதனை நம்பி, தனது வீட்டிற்கு அல்லது அதற்கு அருகில் வந்த 5 தென்கொரிய பெண்களை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவுஸ்திரேலிய நீதிமன்றம் பாலேஷ் தன்கருக்கு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
40 ஆண்டுகள்
அந்நாட்டின் ஊடக அறிக்கையின்படி, பாலேஷ் தன்கர் டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்பட்டபோது, 30 ஆண்டுகள் பரோல் இல்லாத கால அவகாசத்தைப் பெற்றார்.
இந்த தீர்ப்பில், "2018 முதல் 2023ஆம் ஆண்டு வரை 13 துஷ்பிரயோக வழக்குகள் உள்ளிட்ட 39 குற்ற வழக்குகளில் தன்கர் குற்றவாளியென அறிவிக்கப்படுகிறது.
குற்றங்களின் தீவிரத்தை பிரதிபலிக்கவும், மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் இந்த கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது" என கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |