அவுஸ்திரேலியாவில் கோவிட் சோதனை விதிகள் தளர்வு!
Omicron பரவலுக்கு மத்தியில், அவுஸ்திரேலியாவில் கோவிட்-19 சோதனை விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் முதல் முறையாக, தினசரி தொற்று எண்ணிக்கை 20,000-ஐ எட்டிய நிலையில், டிசம்பர் 30, வியாழனன்று பாதிக்கப்பட்டவர்களின் நெருங்கிய தொடர்புகள் (close contacts) மற்றும் சோதனைகளுக்கான தேவைகளைத் தளர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் COVID-19 சோதனை வசதிகள் மீதான அழுத்தத்தைக் குறைக்க அரசு முயற்சி எடுத்துள்ளது.
வெள்ளிக்கிழமை (டிசம்பர் 31) முதல் “நெருக்கமான தொடர்புகள்” (close contacts) பாதிக்கப்பட்ட நபருடன் ஒரே வீட்டில் வசிப்பவர்கள் என மறுவரையறை செய்யப்படும் (people who live in the same household with an infected person) என்று பிரதமர் ஸ்காட் மோரிசன் செய்தியாளர்களிடம் கூறினார்.
அவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும், மேலும் அவர்களுக்கு COVID-19 அறிகுறிகள் இருந்தால் மட்டுமே PCR பரிசோதனை செய்ய வேண்டும்.
அறிகுறியற்ற நபர்கள் தனிமைப்படுத்தப்படுவதைத் தடுக்கவும், மாநிலங்களுக்கு இடையேயான பயணத்திற்காக, குறிப்பாக சுகாதாரம், விருந்தோம்பல் மற்றும் விமான நிறுவனங்களில் PCR சோதனைகளைப் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்களின் நீண்ட வரிசைகளை குறைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் அவர்கள் தொற்றுடன் பொது தளத்தில் இருக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படலாம்.
இதன் காரணமாக, சுகாதார அதிகாரிகள் PCR சோதனைகளுக்கு பதிலாக வீட்டிலேயே விரைவான ஆன்டிஜென் சோதனைகளை அதிகம் தேர்வு செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.