Ind Vs Aus கடைசி ஒருநாள் போட்டி : அனல் தெறிக்கப்போகும் களம்... - வெல்லப்போவது யார்?
இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கான கடைசி ஒருநாள் போட்டியில் இன்று நடைபெற உள்ளது.
Ind Vs Aus 3 ஒருநாள் போட்டி
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் தொடரின் 3-வது டெஸ்ட் இந்தூரில் சமீபத்தில் நடைபெற்றது. இப்போட்டியின் இறுதியில், ஆஸ்திரேலிய அணி 18.5 ஓவர்களில் 1 விக்கெட் மட்டும் இழந்து இந்தியா அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதனால், ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் நீடித்தது. கடைசி ஒரு நாள் போட்டி சமீபத்தில் மும்பையில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியாவும், விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளது.
வெல்லப்போவது யார்?
இந்நிலையில், இத்தொடர் யார் வெல்லப் போகிறார் என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை மதியம் 1.30 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்திய அணி இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வாய்ப்பு உள்ளது.
தரவரிசையில் இந்திய அணி 'நம்பர் ஒன்' இடத்தை தக்கவைப்பது மிக அவசியமாகும். அதே நேரம் டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த ஆஸ்திரேலிய அணியினர் அதற்கு பதிலடியாக ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் சொந்தமாக்க வேண்டும்.
இதனால், இரு அணிகளுக்கிடையே இன்று போட்டி அனல் தெறிக்க உள்ளது. இதனால், இப்போட்டியை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.