Ind Vs Aus கடைசி ஒருநாள் போட்டி : கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்ற 12 பேர் கைது...!
Ind Vs Aus கடைசி ஒருநாள் போட்டி சென்னையில் நடந்து வரும் நிலையில், கள்ளச்சந்தையில் டிக்கெட்டுக்களை விற்ற 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Ind Vs Aus 3 ஒருநாள் போட்டி
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இந்நிலையில், இத்தொடர் யார் வெல்லப் போகிறார் என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று மதியம் 1.30 மணியிலிருந்து நடைபெற்று வருகிறது.
தரவரிசையில் இந்திய அணி 'நம்பர் ஒன்' இடத்தை தக்கவைப்பது மிக அவசியமாகும். அதே நேரம் டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த ஆஸ்திரேலிய அணியினர் அதற்கு பதிலடியாக ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் சொந்தமாக்க வேண்டும்.
கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்ற 12 பேர் கைது
சேப்பாக்கம் மைதானத்தில் 3½ ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டி நடைபெறுவதால் மைதானத்தில் ரசிகர்கள் பெருமளவில் குவிந்துள்ளனர்.
தற்போது இந்தியா-ஆஸ்திரேலியா 3-வது கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், மைதானத்திற்கு வெளியே போட்டிக்கான டிக்கெட்டை கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்பட்டது.
இது குறித்து போலீசாருக்கு ரகசியத் தகவல் கொடுக்கப்பட்டது. உடனே, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அதிரடியாக 12 பேரை கைது செய்தனர்.
ஒரு டிக்கெட் விலை ரூ.1500 மட்டுமே. ஆனால், கள்ளச்சந்தையில் ஒரு டிக்கெட்டின் விலை ரூ.10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.