சாதனை மன்னனாக இறுதி வரை திகழ்ந்த ஷேன் வார்னே! ஜாம்பவானின் கிரிக்கெட் பயணம்
உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஷேன் வோன் நேற்று காலமானார். 52 வயதான அவர் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்த போது திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
தாய்லாந்தில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கியிருந்தபோது, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அவருடன் தங்கியிருந்த ஊழியர்கள் ஷேன் வார்னின் உயிரைக் காப்பாற்ற தீவிரமாக முயன்றுள்ளனர். எனினும் அது தோல்வியடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இவரது மறைவுக்கு அரசியல், கிரிக்கெட் பிரபலங்கள், இரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவர் மறைந்தாலும், அவரது சாதனைகள் எம்மை அவருக்கு ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இவர் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை மேலும் அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.