ஸ்பைடர் மேன் ஆக மாறிய ஆஸ்திரேலிய வீரர் - கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி
இலங்கை அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் பவுண்டரி லைனில் தாவி ஃபீல்டிங் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 போட்டியில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில் 3வது போட்டி இன்று நடக்கவுள்ளது.
இதனிடையே நேற்று முன்தினம் 2வது போட்டியில் இலங்கை அணி பேட்டிங் செய்த போது கடைசி ஓவரில் இலங்கை அணியின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்டியோனிஸ் வீசிய ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் எடுக்கப்பட்ட ஆட்டம் டிராவில் முடிந்தது. பின்னர் சூப்பர் ஓவரில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
இந்த கடைசி ஓவரின் நான்காவது பந்தை இலங்கை வீரர் தீக்ஷனா சிக்சருக்கு விரட்டினார். அனைவரும் சிக்ஸ் சென்று விட்டது என்றே நினைத்த நிலையில் கண நேரத்தில் ஃபீல்டிங் நின்ற ஸ்டீவ் ஸ்மித் பறந்து சென்று பந்தை தடுக்க முயன்றார். அனைவரும் பிரம்மிப்படைந்த நிலையில் சற்றும் எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்தது.
பந்தினை தடுத்த ஸ்மித் கீழே விழும் போது அவரது தலையில் பலமாக அடிப்பட்டது. உடனடியாக, அங்கு வந்த மருத்துவக் குழு அவருக்கு முதலுதவி அளித்தனர். ஸ்மித்தின் உடல்நிலை சரியாக கொஞ்ச நாட்கள் ஆகும் என கூறப்பட்டுள்ளதால் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் அவர் விலகியதாக கூறப்படுகிறது.
That effort was nothing short of incredible!
— cricket.com.au (@cricketcomau) February 14, 2022
Josh Inglis was full of praise for Steve Smith's desperate boundary effort.#AUSvSL | @alintaenergy pic.twitter.com/EAT7tKZ1z4