மாணவர்களுக்கான விசா கட்டணத்தை இருமடங்காக உயர்த்திய அவுஸ்திரேலியா! இந்தியர்கள் அதிர்ச்சி
சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணத்தை அவுஸ்திரேலிய அரசு இரண்டு மடங்கிற்கும் மேலாக உயர்த்தியுள்ளது.
மாணவர் விசா
அவுஸ்திரேலிய அரசு சர்வதேச மாணவர்களுக்கான மாணவர் விசா கட்டணத்தை 710 டொலரில் இருந்து 1,600 டொலராக உயர்த்தியுள்ளது.

கனடா, நியூஸிலாந்து, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது அவுஸ்திரேலியாவின் விசா விண்ணப்பக் கட்டணம் மிகவும் அதிகம் ஆகும்.
அத்துடன் அவுஸ்திரேலியாவிற்குள் விசா விண்ணப்பங்கள் இனி அனுமதிக்கப்படாது என்ற நடைமுறையும் கொண்டுவரப்படுகிறது.
இதனால் விண்ணப்பதாரர்கள் இனி அவுஸ்திரேலியாவில் இருந்து அல்லாமல், வெளிநாட்டில் இருந்து விசா விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
இனி தகுதிபெற மாட்டார்கள்
இதன் காரணமாக, தற்காலிக பட்டதாரி, பார்வையாளர் மற்றும் கடல்சார் பணியாளர் விசாக்களில் இருப்பவர்கள், அவுஸ்திரேலியாவில் இருக்கும்போது மாணவர் விசாவிற்கு விண்ணப்பிக்க இனி தகுதிபெற மாட்டார்கள்.
மேலும், தற்காலிக பட்டதாரி விசாக்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் வயது வரம்பை ஜூலை 1 முதல் 50-லிருந்து 35-ஆக ஏற்கனவே குறைத்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் இந்த நடவடிக்கை, அந்நாட்டில் படிக்க திட்டமிட்டுள்ள லட்சக்கணக்கான இந்திய மாணவர்களைப் பாதிக்கும் என்பதால், மாணவர் சமூகத்தினர் இடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |