மேஜிக் காளான் பயன்பாட்டை சட்டப்பூர்வமாக்கிய உலகின் முதல் நாடு!
சில மனநலப் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு MDMA என்ற மேஜிக் காளான் பயன்பாட்டை சட்டப்பூர்வமாக்கிய உலகின் முதல் நாடாக அவுஸ்திரேலியா மாறியுள்ளது.
போதை மருந்துகளை அங்கீகரித்துள்ள அவுஸ்திரேலியா
மருத்துவ நோக்கத்திற்காக MDMA, மேஜிக் காளான் போன்ற போதை மருந்துகளை அவுஸ்திரேலியா அங்கீகரித்துள்ளது.
இந்த மருந்துகள் எக்ஸ்டசி (ecstasy) மற்றும் சைலோசைபின் (psilocybin) என்றும் அழைக்கப்படுகின்றன, மேலும் அவை ஜூலை 1 முதல் மருத்துவப் பரிந்துரைக்கு வழங்கப்படும்.
இதன்மூலம், சான்றளிக்கப்பட்ட மனநல மருத்துவர்கள் இப்போது பிந்தைய மனஉளைச்சல் சீர்கேட்டால் (post-traumatic stress) பாதிக்கப்பட்டவர்களுக்கு MDMA மற்றும் சில வகையான மனச்சோர்வுக்கான மேஜிக் காளான் ஆகியவற்றை பரிந்துரைக்கலாம்.
Getty Images
மருத்துவ பயன்பாட்டுக்கு அரசு அனுமதி
பிந்தைய மனஉளைச்சல் சீர்கேட்டிலிருந்து நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்க அவை பயனுள்ளதாக இருப்பதைக் கண்டறிந்து, நோயாளிகளில் மாற்றத்தைக் கண்டதையடுத்து அவற்றை மருத்துவ பயன்பாட்டுக்கு அனுமதிக்க அரசாங்கம் முடிவு செய்தது.
பின்னர், நிபுணர் குழுவின் பரிந்துரையின் பேரில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறைந்த அளவிலேயே பயன்படுத்த வேண்டும் என்ற வலுவான பரிந்துரையையும் கொடுத்துள்ளனர்.
Credit: Moha El-Jaw/Getty
உலகில் முதன்முறையாக ஒரு நாடு மேஜிக் காளான் மற்றும் எம்.டி.எம்.ஏ சிகிச்சைக்கு பரிந்துரைத்து, அதற்கான சட்டமும் ஏற்கனவே (ஜூலை 1) அமுலுக்கு வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பரிசோதனையில் மற்ற நாடுகள்
அமெரிக்கா, கனடா மற்றும் இஸ்ரேலிலும் இது தொடரிலான மருத்துவ பரிசோதனைகள் நடந்து வருகின்றன.
அவுஸ்திரேலியாவைத் தவிர, கனடா மற்றும் அமெரிக்காவில் மருந்துகளின் மட்டுப்படுத்தப்பட்ட பயன்பாடு அனுமதிக்கப்படுகிறது. இரண்டு நாடுகளும் ஒன்று அல்லது இரண்டு மருந்துகளை மருத்துவ பரிசோதனைகளில் மட்டுமே பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளன. மருத்துவப் பயன்பாடு சிறப்பு அனுமதிகளுடன் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Magic Mushroom, MDMA, Australia, First Country
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |