12 ஆண்டுகளுக்கு பின் FIFA உலகக்கோப்பையில் அவுஸ்திரேலியா முதல் வெற்றி! ஆர்ப்பரித்த ரசிகர்கள்
அல் ஜனோப் மைதானத்தில் அவுஸ்திரேலிய அணி 1-0 என்ற கோல் கணக்கில் துனிசியாவை வீழ்த்தியது.
நாயகன் மிட்செல் டியூக்
கத்தார் உலகக்கோப்பையின் இன்றைய முதல் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் துனிசியா அணிகள் மோதின.
பரபரப்பாக ஆரம்பித்த இந்தப் போட்டியின் 23வது நிமிடத்தில், அவுஸ்திரேலியாவின் மிட்செல் டியூக் கோல் அடித்தார். அதற்கு துனிசியா அணியால் பதில் கோல் அடிக்க முடியாததால் முதல் பாதியில் அவுஸ்திரேலியா முன்னிலை வகித்தது.
@FIFAWorldCup
அதன் பின்னர் தொடங்கிய இரண்டாம் பாதியில் இரு அணி வீரர்களும் கடுமையாக போட்டியிட்டதால் மேலும் கோல் விழவில்லை. இதனால் மிட்செல் டியூக் அடித்த கோல், அவுஸ்திரேலிய அணியின் வெற்றி கோலாக அமைந்தது.
@FIFAWorldCup
ஆனந்த கண்ணீர்
இது அவுஸ்திரேலிய அணிக்கு 12 ஆண்டுகளுக்கு பின்னர் உலகக்கோப்பையில் கிடைத்த முதல் வெற்றியாகும்.
எனவே, மைதானத்தில் குழுமியிருந்த அவுஸ்திரேலிய ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். மேலும் அணி வீரர்கள் உணர்ச்சிவசப்பட்டு கலங்கினர்.
@FIFAWorldCup
@FIFAWorldCup