இலங்கையில் மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட வெளிநாட்டவர்: மனநலக் கோளாறு காரணமா?
கொள்ளுப்பிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து வெளிநாட்டவர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரை மாய்த்துக் கொண்ட வெளிநாட்டவர்
கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து 51 வயதான அவுஸ்திரேலிய நாட்டை சேர்ந்த ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 3 ஆம் திகதி நடைபெற்ற இந்த சம்பவத்தில், மனநலக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த அவர், 7வது மாடியில் இருந்து கீழே குதித்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அவரைத் தடுக்க முயற்சி செய்தனர்.
ஆனால், அவர் பொலிஸாரைத் தாக்கிவிட்டு கீழே குதித்து உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.
மேலும், அவர் தங்கியிருந்த இடத்திலிருந்த பொருட்களையும் சேதப்படுத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பொலிஸார் விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மனநலக் கோளாறு காரணமாகவே இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று பொலிஸார் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |