வெற்றியை தொட 4 ஆண்டுகால போராட்டம்! இலங்கை தமிழ் குடும்பத்திற்கு அவுஸ்திரேலியா அளித்த அனுமதி
இலங்கை தமிழ் குடும்பம் ஒன்றிற்கு அவுஸ்திரேலியாவில் குடியேற அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. அந்நாட்டு மக்களின் தொடர் போராட்டத்தை அடுத்தே இம்முடிவை அவுஸ்திரேலிய அரசு எடுத்துள்ளது.
இலங்கையை சேர்ந்த பிரியா நடராஜா என்பவரும், நடேஷ் முருகப்பர் என்பவரும் படகு மூலம் 2012ம் ஆண்டு அவுஸ்திரேலியா வந்தனர். அடைக்கலம் கூறி இருவரும் அந்நாட்டு அரசிடம் விண்ணப்பித்ததை அடுத்து அவர்களுக்கு தற்காலிக பாதுகாப்பு விசா வழங்கப்பட்டது.
குடியேறிகளுக்கு வேலை வழங்கும் இறைச்சி கூடங்களை கொண்ட பில்லாயிலா நகரில் அவர்கள் கூடியேறியபோது இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். அவர்களுக்கு கோபிகா, தார்மிகா என்ற பெண் குழந்தைகள் பிறந்தன.
hometobilo
அவுஸ்திரேலியாவில் பிரியா நடேசனின் விண்ணப்பங்கள் பல ஆண்டு பரிசீலனைக்கு பிறகு நிராகரிக்கப்பட்டது. அகதிகள் என்ற தகுதியை பெறுவதற்கான வரைமுறைகள் அவர்களுக்கு இல்லை என அரசு கூறிவிட்டது. 2018ம் ஆண்டு நடேஷ் முருகன் குடும்பத்தின் தற்காலிக விசா காலாவதியான போது அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற முயற்சி நடந்தது.
அப்போது பில்லாயிலா நகரத்தை சேர்ந்தவர்கள் நடேஷ் முருகப்பர் குடும்பத்தை நாட்டை விட்டு வெளியேற்றும் முயற்சிகளுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் தேர்தலில் வெற்றிபெற்ற பிரதமர் அந்தோணி, நடேஷ் முருகப்பர் குடும்பத்திற்கு தனது அரசு விதிவிலக்கு அளிக்கும் என்று கூறியிருந்தார்.
washington post
அதன்படி அவுஸ்திரேலியாவின் புதிய அரசு பிரியா நடேஷ் முருகப்பர் குடும்பத்திற்கு விசா வழங்கியுள்ளது. அவர்கள் தற்காலிகமாக பில்லாயிலா நகரத்தில் வசிக்கவும், வேலை செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் கிறிஸ்துமஸ் தீவில் தடுப்பு காவல் வைக்கப்பட்டுள்ள நடேஷ் முருகப்பர் குடும்பம் குயின்ஸ்லாந்து நகரத்திற்கு திரும்புகின்றனர்.
அவர்களின் 4 ஆண்டுகால போராட்டம் வெற்றியை தொட்டுள்ளது.
guardian