மன்னர் சார்லசுக்கு பெரும் அவமானத்தை அளித்துள்ள அவுஸ்திரேலியா: ஒரு திடுக் தகவல்
பிரித்தானிய மன்னர் சார்லஸ், தனக்கு புற்றுநோய் கண்டறியப்பட்ட நிலையிலும் ஓய்வெடுத்துக்கொண்டிராமல் பரபரப்பாக இயங்கிவருகிறார்.
இந்த வாரத்தில் அவர் அவுஸ்திரேலியாவுக்கும், சமோவா தீவுகளுக்கும், அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
ஆனால், அவுஸ்திரேலியாவோ, மன்னரை அவமானப்படுத்தியுள்ளது!
மன்னருக்கு அவமானத்தை அளித்துள்ள அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலிய தலைநகர் Canberraவில், இம்மாதம், அதாவது, அக்டோபர் மாதம் 21ஆம் திகதி நடைபெற இருக்கும் வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க உள்ளார் மன்னர் சார்லஸ்.
ஆனால், அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ஆம், மன்னரை வரவேற்க ஒரு மாகாண பிரீமியர் கூட வரப்போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பிரீமியர்கள் எல்லாமே மன்னர் பெயரால் பதவிப்பிரமாணம் செய்துகொண்டவர்கள். ஆனால், மன்னரை வரவேற்கவோ, ஒருவர் கூட தயாராக இல்லை.
ஆளாளுக்கு ஒவ்வொரு காரணம் கூறி, மன்னரின் வரவேற்பு நிகழ்ச்சிக்கு தங்களால் வர இயலாது என பிரீமியர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மன்னர் தலைவராக உள்ள அவுஸ்திரேலியாவில், மன்னரை வரவேற்க மூத்த அரசியல்வாதிகளும் தலைவர்களும் மறுப்பு தெரிவித்துள்ள விடயம், மன்னருக்கு பெரும் அவமதிப்பை ஏற்படுத்துவதாக கருதப்படுகிறது.
ஏற்கனவே மன்னர் சார்லஸ் தங்கள் நாட்டுக்கு தலைவராக இருக்கத் தேவையில்லை என சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், தற்போது பிரீமியர்களும் மன்னரை புறக்கணித்துள்ளதால், மன்னரின் அவுஸ்திரேலிய பயணம் எப்படி அமையப்போகிறது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |