கடைசி ஒருநாள் போட்டி... - சென்னை வந்தடைந்த இந்தியா, ஆஸ்திரேலியா வீரர்கள்
கடைசி ஒரு நாள் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா, ஆஸ்திரேலியா வீரர்கள் சென்னைக்கு வந்தடைந்தனர்.
Ind Vs Aus 3 ஒருநாள் போட்டி
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் தொடரின் 3-வது டெஸ்ட் இந்தூரில் சமீபத்தில் நடைபெற்றது.
இப்போட்டியின் இறுதியில், ஆஸ்திரேலிய அணி 18.5 ஓவர்களில் 1 விக்கெட் மட்டும் இழந்து இந்தியா அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதனால், ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் நீடித்தது. இந்திய அணி இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வாய்ப்பு உள்ளது.
கடைசி ஒரு நாள் போட்டி
சமீபத்தில் மும்பையில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியாவும், விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், இத்தொடர் யார் வெல்லப் போகிறார் என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை மதியம் 1.30 மணிக்கு நடைபெற உள்ளது. இப்போட்டியை பார்ப்பதற்காக ரசிகர்கள் முண்டியடித்துக்கொண்டு டிக்கெட்டுக்களை வாங்கினர்.
தற்போது அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னைக்கு வந்தடைந்த வீரர்கள்
இந்நிலையில், கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா, ஆஸ்திரேலியா அணி வீரர்கள் நேற்று விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணி இதுவரை 13 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி அதில் 7-ல் வெற்றியும், 5-ல் தோல்வியும் கண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Australina cricket team arrives chennai Airport to play their 3rd odi against India to be held in MA Chidambaram stadium in chennai on Wednesday. @xpresstn @NewIndianXpress @BCCI @TNCACricket @indraneel0 @haisat2005 @shibasahu2012 pic.twitter.com/8s2ad1Q9Zj
— Ashwin Prasath (@ashwinacharya05) March 20, 2023