ஒரு நாள் தொடருக்கான அவுஸ்திரேலிய அணியில் முக்கிய மாற்றம்: அணியில் இணையும் அதிரடி வீரர்கள்
இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் அவுஸ்திரேலியா அணியில் சில மாற்றங்களைச் செய்துள்ளது.
ஒரு நாள் போட்டி
இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை இந்தியா வென்றது. இதனைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் வரும் 17ஆம் திகதி மும்பையில் நடைபெறவுள்ளது.
@cricbuzz
முதல் போட்டி 17ஆம் திகதி மும்பையிலும், 19ஆம் திகதி இரண்டாம் போட்டி விசாகப்பட்டினத்திலும், 22ஆம் திகதி மூன்றாம் போட்டி சென்னையிலும் நடைபெறவுள்ளன.
@getty images
அணியில் மாற்றம்
அவுஸ்திரேலிய அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ்க்கு பதிலாக ஸ்மித் கேப்டனாக அணியை வழிநடத்துவார் எனத் தெரியவந்துள்ளது.
பேட் கம்மின்ஸ்க்கு மாற்று வீரராக யாரும் அறிவிக்கப்படவில்லை. ரிச்சர்ட்சன் காயம் காரணமாக விலகிய நிலையில் மாற்று வீரராக நாதன் எலிஸ் சேர்க்கப்பட்டிருந்தார்.
@cricbuzz
டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக வெளியேறிய டேவிட் வார்னர் தற்போது மீண்டும் இணைவார் எனத் தெரிகிறது.
@starsports
அதிரடி வீரர் மேக்ஸ்வெல் காயத்திலிருந்து குணமடைந்து தற்போது அவுஸ்திரேலிய அணியில் இடம் பிடித்திருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் மெக்டோனல்ட் தற்போது ஒரு நாள் அணியில் சில வீரர்கள் திரும்பி இருக்கிறார்கள். இதனால் அவுஸ்திரேலிய அணியின் பேட்டிங் வலிமை பெற்றுள்ளது என கூறியுள்ளார்.