அவுஸ்திரேலியாவில் 14 கங்காருக்களைக் கொன்ற இரண்டு சிறுவர்கள் கைது!
அவுஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸில் 14 கங்காருக்களை வேண்டுமென்றே கொன்றதாக இரு 17 வயது சிறுவர்கள் மீது குற்றஞம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை (9 அக்டோபர்) சிட்னியில் இருந் தெற்கே 170 மைல் தொலைவில், லாங் பீச்சில் (Long Beach) காலை 7 மணியளவில் அந்தக் கொடூரச் சம்பவம் நடந்ததாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறை அதிகாரிகள், 5 பெரிய கங்காருக்களும் ஒரு குட்டியும் கொல்லப்பட்டிருப்பதைக் கண்டனர்.
அதனையடுத்து Maloneys Beach பகுதியில் மேலும் 7 பெரிய கங்காருக்களும் ஒரு குட்டியும் கொல்லப்பட்டதாக பின்னர் காவல்துறையினருக்குத் தெரியவந்தது.
காப்பாற்றப்பட அந்த குட்டி Picture: Wildlife Information, Rescue and Education Service
ஒரு 6 மாத கங்காரு குட்டி காயமடைந்த நிலையில் காப்பாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து 17 வயது சிறுவர்கள் இருவர் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது நேற்று குற்றம் சாட்டப்பட்டது. அவர்கள் கங்காருக்களைக் கொடூரமாக அடித்துக் கொன்றதாக சந்தேகிக்கப்படுகிறது.