சாம்பியனை விரட்டியடித்த அவுஸ்திரேலியா! இன்றைய விளையாட்டு செய்திகள்
இங்கிலாந்துக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 06 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.
அவுஸ்திரேலியாவின் அடிலைய்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 287 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
288 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 46.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 291 ஓட்டங்களைப் பெற்று ஆறு விக்கெட்டுக்களால் வெற்றியை தனதாக்கியுள்ளது.
இங்கிலாந்து அணி சார்பாக தனித்து நின்று போராடிய டேவிட் மலான், 134 ஓட்டங்களைப் பெற்றதுடன், போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரின் 2 ஆவது போட்டி சிட்னி மைதானத்தில் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.
இன்றைய போட்டிகள் தொடர்பான மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.