இது நடக்கும் வரை பொது முடக்கம் நீடிக்கும்: அவுஸ்திரேலிய பிரதமர் திட்டவட்டம்
அவுஸ்திரேலியாவில் மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வரை நாட்டில் முடக்க நிலை தொடரும் என அந்நாட்டு பிரதமர் தெறிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் (Scott Morrison), நாட்டில் கிருமிதொற்று அதிகரித்ததைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்ட முடக்க நிலையைத் தற்காத்துப் பேசியுள்ளார்.
நாட்டின் மக்கள் தொகையில் குறைந்தது 70 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வரை, கிருமித்தொற்றுக்கு எதிரான முடக்க நிலை அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.
முடக்க நிலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சிட்னி, மெல்பர்ன் நகரங்களில், மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். காவல் துறையினர் நூற்றுக்கணக்கானோரைக் கைது செய்தனர்.
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அதிகமானோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர். அங்கு, இதுவரை இல்லாத அளவில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 830 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதேபோல், விக்டோரியா மாநிலத்தில், 65 பேருக்குக் கிருமிதொற்று ஏற்பட்டது உறுதியானது.