டிராவிஸ் ஹெட்டின் சதத்தால் ரூ.17 கோடிகளை இழந்த அவுஸ்திரேலியா - எப்படி தெரியுமா?
ட்ராவிஸ் ஹெட்டின் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ரூ.17 கோடி இழப்பை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.
டிராவிஸ் ஹெட்டின் சதம்
இங்கிலாந்து மற்றும் இடையேயான பிரபலமான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி அவுஸ்திரேலியாவின் பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் முதல் நாளிலே இரு அணிகளும் 19 விக்கெட்களை இழந்த நிலையில், 5 நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டி 2வது நாளிலே முடிந்தது.
அவுஸ்திரேலிய வீரர் ட்ராவிஸ் ஹெட் அதிரடியாக ஆடி, 83 பந்துகளில் 123 ஓட்டங்கள் எடுத்தார். இதன் மூலம் அவுஸ்திரேலிய அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ரூ.17 கோடி இழப்பு
இந்நிலையில் ட்ராவிஸ் ஹெட்டின் அதிரடி ஆட்டத்தால் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ரூ.17 கோடி இழப்பை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டத்தை காண 51,531 பேரும், 2வது நாள் ஆட்டத்தை காண 49,983 பேரும் என மொத்தம் 1,01,514 பேர் மைதானத்திற்கு வருகை தந்துள்ளனர்.
2 நாட்களிலே போட்டி முடிவடைந்து விட்டதால், மீதமுள்ள 3 நாட்களுக்கான டிக்கெட் விற்பனை மற்றும் ஸ்பான்ஸர்ஷிப்பில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் மூலம், அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் 3 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் (இந்திய மதிப்பில் ரூ.17 கோடி) இழப்பை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |