அவுஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! தட்டித்தூக்கிய தென் ஆப்பிரிக்க பவுலர்கள் (வீடியோ)
உலக டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
WTC இறுதிப்போட்டி
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் WTC இறுதிப்போட்டி இன்று தொடங்கியுள்ளது. நாணய சுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தெரிவு செய்தது.
Kagiso Rabada delivers big time for South Africa with two wickets in an over 🔥
— ICC (@ICC) June 11, 2025
Catch the action live on our official broadcasters here ➡ https://t.co/oas2Rsdptj#Cricket #CricketReels #WTC25 pic.twitter.com/I9vOR8nCup
அதன்படி அவுஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜா மற்றும் மார்னஸ் லபுஸ்சாக்னே களமிறங்கினர். ரபாடா, ஜென்சென் மற்றும் இங்கிடி ஆகியோரின் மும்முனை தாக்குதல் பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி தடுமாறியது.
அதாவது 5 ஓவர்களில் 5 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்த அவுஸ்திரேலியா, 12 ஓட்டங்களை எட்டியபோது முதல் விக்கெட்டை இழந்தது.
ரபாடா மிரட்டல்
காகிஸோ ரபாடா (Kagiso Rabada) வீசிய ஓவரில், கவாஜா துடுப்பில் எட்ஜ் ஆன பந்து பெடிங்கம் கையில் தஞ்சமடைந்தது.
20 பந்துகளை எதிர்கொண்ட கவாஜா டக்அவுட் ஆகி, வெளியேற, அதே ஓவரில் கேமரூன் கிரீனும் ஆட்டமிழந்தார்.
அவரது கேட்ச்சை மார்க்ரம் தனதாக்க, 4 ஓட்டங்களில் கிரீன் வெளியேறினார். அதன் பின்னர் நிதானமாக ஆடிய மார்னஸ் லபுஸ்சாக்னேவும் விக்கெட்டை இழந்தார்.
ஜென்சென் (Jansen) வீசிய பந்தில் வெர்ரெய்ன்னேவிடம் கேட்ச் கொடுத்து 17 ஓட்டங்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 11 ஓட்டங்களில் ஜென்சென் ஓவரில் அவுட் ஆனார்.
இதனால் 67 ஓட்டங்களுக்கு 4 முக்கிய விக்கெட்டுகளை அவுஸ்திரேலியா இழந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Marco Jansen strikes big for the Proteas! 💥
— Sportskeeda (@Sportskeeda) June 11, 2025
He removes the dangerous Marnus Labuschagne for 17(56) — Australia in early trouble at 46/3! 🇿🇦🔥#WTCFinal #AUSvSA #MarcoJansen #Sportskeeda pic.twitter.com/6iaiV6kdJ1
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |