அவுஸ்திரேலியாவில் 0 ரன்னுக்கு மூன்று வீரர்கள் டக்அவுட்! அதிர்ச்சி கொடுத்த வங்காளதேசம் (வீடியோ)
வங்காளதேச அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி ஓட்டங்கள் எடுக்காமல் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
மேத்யூ ஷார்ட் கிளீன் போல்டு
அவுஸ்திரேலியா மற்றும் வங்காளதேச அணிகக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி டாக்கவில் நடந்து வருகிறது.
Taskin Ahmed Strikes! 🏏🇧🇩 Matthew Short is bowled! What a breakthrough for Bangladesh! pic.twitter.com/qbnHMpQelI
— Bangladesh Cricket (@BCBtigers) June 11, 2026
நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி துடுப்பாட்டத்தை தொடங்கியது. தஸ்கின் அகமது வீசிய ஓவரின் முதல் பந்திலேயே மேத்யூ ஷார்ட் (Matthew Short) கிளீன் போல்டு ஆனார்.
அடுத்து வந்த கூப்பர் கொனோலி, இடக்கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் வீசிய இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் கீப்பர் லித்தன் தாஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
Fizz Does the Trick! Cooper Connolly falls as Litton Das takes a safe catch behind the stumps! pic.twitter.com/qYglcBxDZo
— Bangladesh Cricket (@BCBtigers) June 11, 2026
அதே ஓவரின் கடைசி பந்தில் மேட் ரென்ஷாவும் (Matt Renshaw) கீப்பரிடம் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார்.
இதனால் அவுஸ்திரேலிய அணி 0 ரன்னுக்கு 3 விக்கெட் என்ற மோசமான நிலையில் ஆட்டத்தைத் தொடங்கியுள்ளது.
The Fizz Strikes Again! 🇧🇩 Mustafizur Rahman gets Matt Renshaw, Litton Das takes a sharp catch pic.twitter.com/DRvqeZSv8M
— Bangladesh Cricket (@BCBtigers) June 11, 2026
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |