மகள் திருமணமே செய்யமாட்டார் என நினைத்த தாய்! வெளிநாட்டு இளைஞரை மணந்த இந்திய பெண்
இந்தியாவை சேர்ந்த மிதிவண்டியை பழுதுபார்க்கும் சிறிய கடை வைத்திருக்கும் நபரின் மகளை அவுஸ்திரேலிய குடிமகன் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அவுஸ்திரேலிய இளைஞருடன் காதல்
இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சாதிக் ஹுசைன். இவர் பேருந்து நிறுத்தத்தின் அருகே சிறிய மிதிவண்டி பழுதுபார்க்கும் கடை வைத்துள்ளார்.
சாதிக்கின் மகள் பெயர் தபாசும் ஹுசைன். இவர் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனுக்கு சென்று கடந்த 2017ல் கல்வி பயின்றார். அவர் படித்த கல்லூரியில் ஆஷ் ஆன்சைல்ட் என்ற மாணவரும் படித்தார்.
Bharat Times
கலாச்சாரம் மீது ஈர்ப்பு
அப்போது தபாசும், ஆஷும் நண்பர்களாகி பின்னர் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இது குறித்து குடும்பத்தாரிமும் கூறி சம்மதம் பெற்றனர், தபாசும் திருமணம் செய்து கொள்வே மாட்டார் என அவர் தாயார் ஜுலுகா நினைத்திருந்த நிலையில் ஆஷ் குறித்து அறிந்து அவர் மகிழ்ச்சியடைந்து திருமணத்திற்கு சம்மதித்துள்ளார்.
இருவருக்கும் கடந்த ஆகஸ்டில் அவுஸ்திரேலியாவில் திருமணம் நடைபெற்றது. பின்னர் ஆஷ் இந்தியாவுக்கு வந்த நிலையில் இந்திய கலாச்சாரம், உணவு வகைகள் மற்றும் விருந்தோம்பல் என அனைத்தும் அவரை கவர்ந்தது.
Bharat Times
பாரம்பரிய முறைப்படி மீண்டும் திருமணம்
இதையடுத்து பாரம்பரிய முறைப்படி மீண்டும் ஆஷ் - தபாசும் திருமணம் சமீபத்தில் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்திற்காக ஆஷின் தாயார் ஜெனிபர் பெர்ரி உள்ளிட்ட உறவினர்களும் இந்தியா வந்தனர். கடந்த 2016 ஆம் ஆண்டில், உயர் கல்விக்காக தபாசுக்கு ரூ. 45 லட்சம் மானியத்தை இந்திய அரசு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
Bharat Times