அவுஸ்திரேலியாவில் அதிகரிக்கும் தொற்று: மெல்போர்னில் முடக்கநிலை நீட்டிப்பு
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்திலுள்ள மெல்போர்ன் நகரில், முடக்கநிலை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான மெல்போர்னில், முடக்கநிலை இம்மாதம் 19-ஆம் தேதி முடிவுபெறும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே, அந்நகரில் டெல்ட்டா வகைக் கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.
டெல்ட்டா வகைக் கிருமி எளிதில் பலரிடம் பரவக்கூடியது. முடக்கநிலையை இப்போதே தளர்த்தினால், கிருமிப்பரவல் நிலை சிட்னி நகரைப் போல் கடுமையாகும் என விக்டோரியா மாநிலப் பிரதமர் டேனியல் ஆண்ட்ரூ (Daniel Andrew) செய்தியாளர்களிடம் கூறினார்.
விக்டோரியா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 20 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகரான சிட்னியில் தற்போதைய நிலையில் ஆகஸ்ட் மாத இறுதி வரை முடக்கநிலை நீடிக்கவுள்ளது. அங்கு புதன்கிழமையன்று புதிதாக 344 பேர் கொரோனாவாழ் பாதிக்கப்பட்டுள்ளனர்.