அவுஸ்திரேலியாவின் 3.9 பில்லியன் டொலர் பாதுகாப்பு திட்டம்: புதிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் தளம்
அவுஸ்திரேலியாவில் 3.9 பில்லியன் டொலர் மதிப்பிலான பிரம்மாண்ட கப்பல் தளம் கட்டும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் தளம்
அவுஸ்திரேலிய பாதுகாப்பு திறனை மேம்படுத்தும் விதமாக அடிலெய்ட் நகரின் ஆஸ்போர்ன் புதிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் தளம் உருவாக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 3.9 பில்லியன் அவுஸ்திரேலிய டொலர் மதிப்பிலான இந்த AUKUS (அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா) திட்டம் தொடர்பான அறிவிப்பை அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்த திட்டம் அவுஸ்திரேலிய நாட்டின் பாதுகாப்பில் ஒரு அடிப்படைத் தூண் என்று அந்தோணி அல்பானீஸ் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அமெரிக்கா, பிரித்தானியா உடனான நீண்ட கால உறுதிமொழிகளை நிறைவேற்றவும், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இது அவசியமானது எனவும் அல்பானீஸ் குறிப்பிட்டுள்ளார்.
அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் தளம் இந்தோ பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் கடல்சார் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது தொடர்பான முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |