2021-ல் பதிவான முதல் கோவிட் மரணம்.. எந்த நாட்டில் தெரியுமா?
அவுஸ்திரேலியாவில் 2021-ஆம் ஆண்டில் கோவிட் தொடர்பான முதல் மரணம் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள சிட்னி நகரத்தில் 90 வயதுள்ள ஒரு பெண் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இவரது மரணமே அவுஸ்திரேலியாவில் இந்த ஆண்டின் முதல் கொரோனா தொடர்பான இறப்பு ஆகும். மேலும் நியூ சவுத் வேல்ஸில் கடந்த 10 மாதங்களில் பதிவான முதல் மரணமும் இதுவே.
நியூ சவுத் வேல்ஸில் நேற்று ஒரே நாளில் 77 பேர் புதிதாக கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில் தற்போது, 52 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெரு வருகின்றனர். அதில் 15 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான சிட்னி தற்போது கோவிட் முடக்கநிலையில் உள்ளது. இங்கு, இந்தியாவில் தோன்றிய 'டெல்டா' வகை வைரஸ் அதிக அளவில் பரவி வருகிறது.
அவுஸ்திரேலியாவில் தற்போது 10 சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கே முழுமையான தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இங்கு தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது.