மன்னர் சார்லஸின் புகைப்படத்தை புறக்கணிக்க அவுஸ்திரேலியா முடிவு
அவுஸ்திரேலியா அதன் புதிய 5 டொலர் பணத்தாளில் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸின் படத்தை அச்சிடாது என்பதை தெளிவாக அறிவித்துள்ளது.
5 டொலர் பணத்தாள்
அவுஸ்திரேலியாவின் 5 டொலர் பணத்தாளில் இப்போது ராணி இரண்டாம் எலிசபெத்தின் படம் உள்ளது. ராணி இறந்துவிட்டதால், அவரைத் தொடர்ந்து முடிசூடியுள்ள மன்னர் மூன்றாம் சார்லஸின் படத்துடன் புதிய 5 டொலர் தாள் வெளிப்படவேண்டும்.
ஆனால், அவுஸ்திரேலியா அரசாங்கம் மறைந்த பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத்தின் உருவப்படத்தை அதன் 5 டொலர் பணத்தாளில் நீக்கிவிட்டு, அவுஸ்திரேலிய பழங்குடி கலாச்சாரத்தின் வரலாற்றைப் போற்றும் வகையில் புதிய வடிவமைப்பைக் கொண்டு வருவதாக அந்நாட்டின் மத்திய வங்கி இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளது.
PA Images
அவுஸ்திரேலிய ரிசர்வ் வங்கி அறிக்கை
அவுஸ்திரேலிய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த மாற்றத்தை ஆதரிக்கும் மத்திய அரசுடன் கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. தாளின் மறுபக்கம் அவுஸ்திரேலிய நாடாளுமன்றம் தொடர்ந்து இடம்பெறும் என்றும் அறிவித்துள்ளது.
முன்னதாக, செப்டம்பர் 2022-ல் ராணி எலிசபெத் இறந்ததைத் தொடர்ந்து, 5 டொலர் நோட்டுகளில் ராணியின் படத்தை தானாகவே சார்லஸ் மன்னரின் படம் மாற்றாது என்று அவுஸ்திரேலிய அரசு கூறியது. அவரது படத்திற்கு பதிலாக அவுஸ்திரேலிய பிரமுகர்களில் ஒருவரது படம் மாற்றப்படலாம் என்று கூறியது.
ராணி இரண்டாம் எலிசபெத்தின் ஆளுமை
அவுஸ்திரேலியாவின் 5 டாலர் நோட்டில் ராணியின் உருவம் இடம் பெற்றதற்கு காரணம், அவர் ராணியாக இருந்தார் என்பதற்காக அல்ல, அவரது ஆளுமையை பறைசாற்றுவதற்காகத் தான் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
PHOTO: VICTORIA JONES - POOL/GETTY
5 டொலர் நோட்டை வடிவமைக்கும் முன் ரிசர்வ் வங்கி பழங்குடியின குழுக்களை கலந்தாலோசிக்கும். நோட்டுகளை வடிவமைத்து அச்சிடுவதற்கான முழு செயல்முறையும் பல ஆண்டுகள் ஆகும். அதுவரை தற்போதைய நோட்டு தொடர்ந்து வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ஆம் திகதி பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்திற்குப் பிறகு மன்னரான மூன்றாம் சார்லஸ், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பிரித்தானியாவிற்கு வெளியே உள்ள 12 காமன்வெல்த் நாடுகளின் அரச தலைவராக உள்ளார், ஆனால், இந்த பாத்திரம் பெரும்பாலும் சம்பிரதாயமானது.