அவுஸ்திரேலியாவில் இனி இவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும்! அரசாங்கம் அதிரடி அறிவிப்பு
அவுஸ்திரேலியாவில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் கணவன் அல்லது மனைவிக்கு அரசாங்கம் நிதியுதவி வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
குடும்பத்தில் கணவனோ மனைவியோ தங்கள் இணையிடமிருந்து தொடர்ந்து வன்முறை தாக்குதல்களுக்கு ஆளாகும் நிலையில், அவர்கள் தங்கள் உறவை முடிவுக்குக் கொண்டுவந்தால், அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆஸ்திரேலிய அரசு நிதி உதவி வழங்குகிறது.
தங்களை அடித்து துன்புறுத்தும் ஒரு கூட்டாளியுடன் உறவில் இருப்பதால் பாதிக்கப்படும் அனைத்து பாலினங்களுக்கும் இந்த நிவாரணம் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், பள்ளி கட்டணம் போன்ற செலவுகள் உட்பட, 3700 டொலர் வரையிலான நிதியை பணமாகவோ அல்லது நேரடி கட்டணமாகவோ வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சியைப் பாராட்டிய மகளிர் அமைச்சர் மாரிஸ் பெய்ன் (Marise Payne), '' நமது சமூகத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு, சமத்துவம் மற்றும் மரியாதைக்கான அடிப்படை உரிமை உண்டு'' என்றார்.
Photograph: AFP
விமர்சகர்கள் இந்த சைகை, நாட்டில் குடும்ப வன்முறைக்கான மூல காரணத்தை தீர்க்கவில்லை என்று விமர்சித்துள்ளனர்.
மிஷன் ஆஸ்திரேலியா என்ற தொண்டு நிறுவனம் கூறுகையில், குடும்ப வன்முறை என்பது அவுஸ்திரேலியாவில் ''distrubingly common" தொடர்ந்து நடக்கிற பொதுவான பிரச்சினை ஆகிவிட்டது என கூறியுள்ளது.
ஊரடங்கு காலத்தில் 2020ல் காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட குடும்ப வன்முறை தொடர்பான வழக்குகளில் 13 சதவிகிதம் அதிகரிப்பதாக அவுஸ்திரேலிய பணியகம் ஓஎஸ் புள்ளிவிவரம் ஜூன் மாதம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது.
நாட்டில் சுமார் 2.2 மில்லியன் மக்கள் தங்கள் கூட்டாளிகளால் உடல் அல்லது பாலியல் துஷ்பிரயோகத்தை அனுபவித்திருப்பதாகவும் அது கூறியது. ஆஸ்திரேலிய சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு நிறுவனம் நடத்திய அதிர்ச்சியூட்டும் ஆய்வின்படி, 9 நாட்களுக்கு ஒரு முறை ஒரு பெண் தனது கூட்டாளியால் கொல்லப்படுகிறார்.
' வீட்டு வன்முறையின் தீவிரம் மற்றும் அதன் பரவல் அதிகரிப்பு மட்டுமல்ல, குற்றவாளிகள் கோவிட் பொது முடக்கத்தைப் பயன்படுத்தி தங்கள் இணையை தொடர்ந்து கட்டாயக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை கண்டறிந்தோம்”என்று இணை ஆசிரியரும் பேராசிரியருமான கெர்ரி கேரிங்டன் (Kerry Carrington) கூறினார்.
கொரோனா பெருந்தொரு காரணமாக, நிதி நீதியாகவும், உளவியல் ரீதியாகவும் ஏற்படும் மன அழுத்தங்கள், குழந்தைகளுடன் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது போன்ற அழுத்தங்கள் உண்மையில் குடும்ப வன்முறையின் பரவலை அதிகப்படுத்தியுள்ளது என கேரிங்டன் கூறினார்.
பாலியல் வன்முறை, நிதி பாதுகாப்பு மற்றும் நாட்டின் பல்வேறு சமூக உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி விவாதிக்க பெண்களின் பாதுகாப்புக்கான தேசிய உச்சிமாநாட்டையும் அவுஸ்திரேலியா நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.