9 மாத ஊரடங்கு! மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் பிரபல நாடு.. வெளியான முக்கிய தகவல்
ஆஸ்திரேலியா நாட்டில் சுமார் 9 மாத ஊரடங்குக்கு பிறகு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருகின்றது.
ஆஸ்திரேலியா நாட்டில் பெரும் ஆபத்தான டெல்டா வைரஸ் இந்த வருடம் தொடக்கத்தில் இருந்து பயங்கர வேகமாக பரவி வருகிறது.
இதனால் ஆஸ்திரேலியாவின் முக்கிய மாகாணமான விக்டோரியா, மெல்போர்ன், நியூ சவுத் வேல்ஸ் போன்ற இடங்களில் கொரோனா பரவல் அதிகரித்தது. கொரோனவை கட்டுக்குள் அடக்க 9 மாதங்கள் ஊரடங்கு விதிக்கப்பட்டது.
தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றது. மால்கள், சந்தைகள் போன்றவை திறக்கப்பட்டுள்ளதால் ஆஸ்திரேலியா பழைய நிலைக்கு திரும்பி வருகின்றது.
கொரோனா அதிகம் தாக்கிய மெல்போர்னில் தற்போது 80 சதவீத மக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.
அதேசமயம் இளைஞர்களும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்றும் சமூக இடைவெளி மற்றும் தடுப்பூசி மட்டுமே கொரோனா பரவலை தடுக்க உதவும் என்றும் ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.