அவுஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் இளையராஜாவுக்கு கிடைத்த கௌரவம்
australia parliment honoured ilayaraaja by stamp release: அவுஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் இளையராஜாவிற்கு, சிறப்பு தபால் தலை வெளியிட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் இளையராஜாவுக்கு கௌரவம்
1976 ஆம் ஆண்டில் அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, மொத்தமாக 1500 க்கும் மேற்பட்ட படங்களில், சுமார் 7,000 மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

இளையராஜா கடந்த சில மாதங்களாக, வெளிநாடுகளில் இசை சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
தற்போது அவர் அவுஸ்திரேலியாவில் இசை நிகழ்ச்சி நடத்தி வரும் நிலையில், முதல் நிகழ்ச்சி செப்டம்பர் 19 ஆம் திகதி மெல்போர்னில் நடைபெற்றுள்ளது.
செப்டம்பர் 24 ஆம் திகதி பெர்த்திலும், செப்டம்பர் 26 ஆம் திகதி சிட்னியிலும், அக்டோபர் 5 ஆம் திகதி பிரிஸ்பேனிலும் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார்.
இந்நிலையில், இளையராஜாவின் திரைப்பயணம் 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் அவருக்கு தபால் தலை வெளியிட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் வைத்து, அவுஸ்திரேலிய நிதித்துறை அமைச்சர் என்வர் எர்டோகன் அந்த சிறப்பு தபால் தலையை வெளியிட, இளையராஜா அதனை பெற்றுக்கொண்டார்.
நன்றி தெரிவித்த இளையராஜா
அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பேசிய வீடியோவை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ள இளையராஜா, "எனது 50 ஆண்டு காலப் பயணத்தை ஒரு சிறப்பு அஞ்சல் முத்திரை வெளியீட்டின் மூலம் நினைவுகூரச் செய்ததற்காக, விக்டோரியன் அரசாங்கத்தின் நிதி அமைச்சரும், மாண்புமிகு என்வர் எர்டோகன் எம்.பி அவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
I offer my sincere gratitude to the Honorable Enver Erdogan MP, Minister for Finance, Victorian Government, and the Members of Parliament for having my 50-year journey commemorated through a ceremonial stamp release. Being born in a small, remote village in Tamil Nadu and honored… pic.twitter.com/QXl4yQZURi
— Ilaiyaraaja (@ilaiyaraaja) September 22, 2026
தமிழ்நாட்டின் ஒரு சிறிய, தொலைதூர கிராமத்தில் பிறந்து, ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கௌரவிக்கப்படுவது உண்மையிலேயே நெகிழ்ச்சி அளிக்கிறது.
மேலும், எனது இசைக்கு உயிர் கொடுத்த எண்ணற்ற மக்களுக்கும், என் அருகில் பயணித்த கலைஞர்களுக்கும், எனது இசையமைப்புகளை வரவேற்ற தலைமுறை தலைமுறையாகக் கேட்டவர்களுக்கும் இந்த நல்வாய்ப்பில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
இளையராஜாவிற்கு மற்றொரு கௌரவமும் கிடைக்க உள்ளது. இளையராஜா இசையமைப்பில், சந்தோஷ் டாவகார் இயக்கிய மராத்தி திரைப்படமான ‘கோந்தல்’ 2027 ஆஸ்கருக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ தேர்வாக அறிவிக்கப்பட்டது.