பாடகி கைலி மினாக் குறித்து ஆபாச கருத்து: மன்னிப்பு கேட்ட அவுஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ்
அவுஸ்திரேலிய பாப் பாடகி கைலி மினாக் குறித்து பொதுமேடையில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததற்காக அவுஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் பகிரங்க மன்னிப்பு கோரினார்.
பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து
அவுஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் பிரபல நகைச்சுவை நடிகை நிக்கி ஆஸ்போர்ன் தொகுத்து வழங்கிய Bush deep என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பதிலளித்தார்.
அப்போது பாடகி கைலி மினாக், அவுஸ்திரேலிய ஹாலிவுட் நடிகை நிக்கோல் கிட்மேன் மற்றும் அவுஸ்திரேலிய கலைஞர் ரோண்டா பர்ச்மோர் குறித்து கவர்ச்சியான கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது.

ஆரம்பத்தில் தனக்கு திருமணம் ஆகி 6 மாதங்கள் தான் ஆகிறது என அந்த கேள்விக்கு பதிலளிக்காமல் தவிர்த்த பிரதமர் ஆண்டனி, தொகுப்பாளரின் தொடர் வற்புறுத்தலுக்கு பிறகு பதிலளித்தார்.
ஆனால் அந்த பதில், பாடகி கைலி மினாக் குறித்து ஆபாசமாகவும், பெண்களை இழிவுபடுத்தும் விதமாகவும் இருந்ததாக பல விமர்சனங்கள் எழுந்தன. பிரதமரின் இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு அவுஸ்திரேலிய பெண் அரசியல்வாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நாட்டின் உயர்ந்த பதவியில் இருக்கும் பிரதமர் பெண்கள் குறித்து இப்படி கருத்து கூறுவது அழகல்ல என கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது.

மன்னிப்பு கோரினார் பிரதமர்
கண்டங்கள் அதிகரித்ததை தொடர்ந்து அவுஸ்திரேலிய பிரதமர் அலுவலகம் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், பிரதமர் ஆண்டனி அல்பனீஸ், “பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் தெரிவித்த கருத்துக்காக எந்தவொரு நிபந்தனையும் இன்றி மனமார்ந்த முழு மன்னிப்பை கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |