இந்த வெறுக்கத்தக்க தாக்குதலை வன்மையாக கண்டிருக்கிறோம்! இஸ்ரேலுக்காக கொந்தளித்த அவுஸ்திரேலிய பிரதமர்
இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகள் கண்டனம்
ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய பயங்கரவாத தாக்குதலினால் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஜேர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் இதில் அடங்கும்.
இஸ்ரேல் இராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகேரி, தங்கள் இராணுவம் நடத்திய தாக்குதலில் 400க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக கூறினார்.
அதேபோல் காசா முனையில் ஹமாஸ் குழுவினரின் இருப்பிடங்கள் மீது இஸ்ரேல் பாதுகாப்புப்படை தாக்குதல் நடத்தி வருகிறது.
EPA / Mohammed Saber
அவுஸ்திரேலிய பிரதமர் கண்டனம்
இந்நிலையில் ஐரோப்பிய, அமெரிக்க, ஆசிய நாடுகளைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவும் ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
அந்நாட்டின் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வெளியிட்டுள்ள தனது கண்டன பதிவில், 'இந்த நேரத்தில் இஸ்ரேலுடன் அவுஸ்திரேலியா துணை நிற்கிறது. ஹமாஸ் அமைப்பின் பாரபட்சமற்ற, வெறுக்கத்தக்க தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறோம். தங்களை தற்காத்துக் கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |