சீன தயாரிப்பு சிசிடிவி கமெராக்களை அகற்ற அவுஸ்திரேலியா முடிவு
பாதுகாப்பு காரணங்களுக்காக சீனாவில் தயாரிக்கப்பட்ட கமெராக்களை அகற்ற அவுஸ்திரேலியா நடவடிக்கை எடுத்டுள்ளது.
அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் இதேபோன்ற நடவடிக்கைளைப் பின்பற்றுகிறது, அரசாங்கத் துறைகள் சீனாவில் தயாரிக்கப்பட்ட கமராக்களை முக்கியமான இடங்களில் நிறுவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளன.
கேமராக்கள் மூலம் சேகரிக்கப்பட்ட உளவுத் தகவல்களை சீன பாதுகாப்பு சேவைகளுடன் பகிர்ந்து கொள்ள சீன நிறுவனங்கள் கட்டாயப்படுத்தப்படலாம் என்று இரு நாடுகளும் அச்சம் தெரிவித்துள்ளன.
அரசாங்க கட்டிடங்களில் சீன கமெராக்கள்
[AFP
இந்நிலையில், பாதுகாப்பு தளங்களில் பொருத்தப்பட்டுள்ள சீனத் தயாரிப்பான பாதுகாப்புக் கமெராக்களைக் (CCTV Camera) கழற்றிவிட அவுஸ்திரேலிய அரசாங்கம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சி அரசியல்வாதியான ஜேம்ஸ் பேட்டர்சன் தொகுத்த உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, 250-க்கும் மேற்பட்ட அவுஸ்திரேலிய அரசாங்க கட்டிடங்களில் குறைந்தது 913 சீன தயாரிப்பு கமெராக்கள் நிறுவப்பட்டுள்ளன.
பாதுகாப்பு, வெளியுறவு மற்றும் நிதித் துறைகள் மற்றும் அட்டர்னி ஜெனரல் துறையைச் சேர்ந்த அலுவலகங்கள் மற்றும் கட்டிடங்கள் இதில் அடங்கும்.
வேட்டையாடி அகற்றுவார்கள்
அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ், திணைக்களத்தின் கட்டிடங்களில் உள்ள அனைத்து சீனத் தயாரிப்பு பாதுகாப்பு கமெராக்களையும் அதிகாரிகள் வேட்டையாடி அகற்றுவார்கள் என்று அறிவித்தார்.
அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பை உறுதி செய்வது முக்கியம் என்பதால் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட தேசிய போர் நினைவுச்சின்னம் - 14 ஹெக்டேர் (35 ஏக்கர்) பரப்பளவு கொண்ட கான்பெரா வளாகம் சீன தயாரிப்பு கமெராக்களை அகற்றுவதாகவும் உறுதிப்படுத்தியது. மற்ற அரசாங்க நிறுவனங்கள் இது குறித்து எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டன.