ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஸ் கோப்பை: அவுஸ்திரேலிய அணி அறிவிப்பு
பிப்ரவரியில் நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைக்கான அவுஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது குழந்தை பிறந்ததால் மற்றும் முழங்கால் காயத்தை நிர்வகிக்கவும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை பெட் கம்மின்ஸ் தவறவிட்டார்.
மேலும் காயம் காரணமாக ஹேசில்வுட் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2வது போட்டிக்கு பிறகு தொடரில் இருந்து விலகினார்.
Our preliminary squad for the 2025 @ICC #ChampionsTrophy is here 🔥 pic.twitter.com/LK8T2wZwDr
— Cricket Australia (@CricketAus) January 13, 2025
இந்நிலையில் பெட் கம்மின்ஸ் மற்றும் ஹேசில்வுட் இருவரும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைக்கான அவுஸ்திரேலிய அணிக்கு திரும்பியுள்ளனர்.
"இது சமநிலையான மற்றும் அனுபவமிக்க அணி" என்று அவுஸ்திரேலிய அணியின் தலைமை தேர்வாளர் ஜார்ஜ் பெல்லி தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய அணி விவரம்
பேட் கம்மின்ஸ் (கேப்டன்), அலெக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லாபுசாக்னே, மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மேட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஜாம்பா.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |