37 வயதில் அவுஸ்திரேலிய விளையாட்டு வீரர் திடீர் மரணம்
Port adeilaide player daniel stewart dies at 37: அவுஸ்திரேலிய ரக்பி விளையாட்டு வீரர் டேனியல் ஸ்டீவர்ட் காலமானார்.
அவுஸ்திரேலிய முன்னாள் ரக்பி விளையாட்டு வீரர் டேனியல் ஸ்டீவர்ட் தனது 37வது வயதில் உயிரிழந்தார்.
டேனியல் ஸ்டீவர்ட்
2010 முதல் 2013 வரை போர்ட் அடிலெய்டு அணிக்காக விளையாடியவர் டேனியல் ஸ்டீவர்ட் (Daniel Stewart).
அணியின் நட்சத்திர வீரரான இவர், ஓய்வுக்கு பிறகு உடற்பயிற்சிகூட உரிமையாளராக செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில், டேனியல் ஸ்டீவர்ட் தனது 37 வயதில் திடீரென காலமானார். அவரது மனைவி லாரா தனது சமூக ஊடகப் பக்கத்தில், தங்கள் மகன்களுடன் எடுத்த குடும்ப புகைப்படத்துடன் அவருக்கு அஞ்சலியை பதிவிட்டார்.
அவரது பதிவில், "பேரதிர்ச்சியுடன் எங்கள் உலகத்தையே இழந்துவிட்டதை உறுதிப்படுத்துகிறேன். இந்த உலகில் பெரிய இதயம் கொண்டவர். நாங்கள் உங்களை மிகவும் நேசிக்கிறோம்" என கூறியுள்ளார்.
போர்ட் அடிலெய்டு அணியின் தலைமை நிர்வாகி மேத்யூ ரிச்சர்ட்சன் வெளியிட்ட அறிக்கையில், இந்த மரணம் அணியில் உள்ள அனைவருக்கும் அதிர்ச்சியாக வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
