மேக்ஸ்வெல் மனைவிக்கு அருவருக்கதக்க மெசேஜ் அனுப்பிய இந்திய ரசிகர்கள்: வினி ராமன் குற்றச்சாட்டு
உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்த நிலையில், அவுஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்லின் மனைவிக்கு அருவருக்கத்தக்க மெசேஜ்களை இந்திய ரசிகர்கள் அனுப்பி வருவதாக வினி ராமன் தெரிவித்துள்ளார்.
மேக்ஸ்வெல் மனைவி குற்றச்சாட்டு
நேற்று குஜராத்தின் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியை தேற்கடித்து அவுஸ்திரேலியா 6வது முறையாக உலக கோப்பையை தட்டிச் சென்றது.
இந்நிலையில் அவுஸ்திரேலிய வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை குறி வைத்து இந்திய ரசிகர்கள் சிலர் சமூக வலைதளங்களில் அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், அவுஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்லின் மனைவி வினி ராமன், தனது இன்ஸ்டாகிராமில் இந்திய ரசிகர்கள் சிலர் அருவருக்கத்தக்க மெசேஜ்களை இந்திய ரசிகர்கள் சிலர் அனுப்பி வருவதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
அத்துடன் நான் பிறந்து, வளர்ந்த, என் கணவர் விளையாடும் அவுஸ்திரேலிய அணிக்கு ஆதரவாகவும், அதே நேரம் என்னால் இந்தியராகவும் இருக்க முடியும் என்பதை மெசேஜ் அனுப்புவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என வினி ராமன் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் மனைவி வினி ராமன் இந்திய வம்சாவளியை சேர்ந்த நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |