சிட்னியை அடையக்கூடும் சீனாவின் கொடூர ஏவுகணை! பகீர் எச்சரிக்கை
அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு நிபுணர் ஒருவர், சீனாவின் ஏவுகணை சிட்னி, பிரிஸ்பேன் நகரங்களை தாக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.
சீனாவின் ஏவுகணை
தைவான் மீது சீனா படையெடுத்தால் அடுத்த ஆண்டிலேயே பசிபிக் பிராந்தியத்தில் போர் வெடிக்கக்கூடும் என்று, அவுஸ்திரேலியாவின் முன்னாள் உள்விவகார அமைச்சர் மைக் பெசுல்லோ எச்சரித்தார்.
இந்த நிலையில், சீனாவின் அச்சுறுத்தும் ஏவுகணை சிட்னி மற்றும் பிரிஸ்பேனை அடையக்கூடும்.
அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட நீண்ட தூர ஏவுகணையை ஏவியது அவுஸ்திரேலியாவிற்கு ஒரு பெரும் கவலையாக உள்ளது.
பாதுகாப்பு நிபுணர்
ஏனெனில், ஒருவேளை சீனா அவுஸ்திரேலியாவிற்கு எதிராக போர் தொடுக்க முடிவு செய்தால், இந்த ஆயுதம் சிட்னி அல்லது பிரிஸ்பேன் போன்ற நகரங்களைத் தாக்கக்கூடும் என்று பாதுகாப்பு நிபுணர் எச்சரித்துள்ளார்.
அரசுக்கு சொந்தமான சின்ஹுவா, இந்த போலி போர்க்குண்டு பொருத்தப்பட்ட இந்த ஏவுகணை, திங்களன்று பசிபிக் பெருங்கடலில் 'இராணுவப் பயிற்சித் திட்டத்தின்' ஒரு பகுதியாக ஏவப்பட்டதாக தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த சோதனை குறித்து அரசாங்கங்களுக்கு சீனா விளக்கம் அளித்துள்ளது. மேலும், இந்த ஏவுகணை Nauru மற்றும் Tuvalu-விற்கு இடையில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியில் விழுந்ததாக கூறப்பட்டுள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |