7, 8வது வரிசையில் அரைசதம் அடித்த வீரர்கள்: வங்காளதேச அணிக்கு 192 இலக்கு
வங்காளதேச அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா 187 ஓட்டங்கள் எடுக்க, DLS விதிப்படி 41 ஓவர்களில் 192 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
விக்கெட்டுகள் சரிவு
அவுஸ்திரேலியா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி டாக்காவில் நடந்து வருகிறது.
முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி ஓட்டங்கள் எடுக்காமலேயே 3 விக்கெட்டுகளை இழந்தது.
பின்னர் அலெக்ஸ் கேரி 13 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அணித்தலைவர் ஜோஷ் இங்லிஸ் 34 ஓட்டங்களில் வெளியேறினார்.
அடுத்து வந்த கேமரூன் கிரீன் 50 பந்துகளில் 25 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதனால் அவுஸ்திரேலிய அணி 81 ஓட்டங்களுக்கு 6 விக்கெட் என தடுமாறியது.
லபுஷேக்னே, பார்ட்லெட் கூட்டணி
அதனைத் தொடர்ந்து மார்னஸ் லபுஷேக்னே மற்றும் சேவியர் பார்ட்லெட் கூட்டணி அணியை மீட்க போராடியது.
அதிரடியாக ஆடிய பார்ட்லெட் (Bartlett) 48 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 52 ஓட்டங்கள் விளாசி அவுட் ஆனார்.
அவுஸ்திரேலிய அணி 42 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.
இதன் காரணமாக வங்காளதேச அணிக்கு 41 ஓவர்களில் 192 ஓட்டங்கள் வெற்றி இலக்கு (DLS விதிப்படி) நிர்ணயிக்கப்பட்டது.
மார்னஸ் லபுஷேக்னே (Marnus Labuschagne) 55 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான் தலா 3 விக்கெட்டுகளும், தன்வீர் இஸ்லாம் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |